Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


தேசிய வேட்பாளராக களமிறங்க சபாநாயகர் தயார்…!


2019-09-17 14887

பெரும்பான்மை கோரிக்கைக்கு தலைசாய்ந்தார் சபாநாயகர்…!

 

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே பிரதான இலக்கு…!

 

(சுஜித் மங்கள டி சில்வா)

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக இல்லாதொழிப்பதற்காக ஒன்றிணைகின்ற அரசியல் சக்திகளுடன் கைகோர்ப்பதன் ஊடாகவே தேசிய வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு துறையினரும் தனக்கு முன்பாக முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளைப் பற்றி ஆராய முடியும் என்று சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தாம் களமிறங்குவதாயின், ஜனநாயகம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றை உறுதிசெய்வதோடு பாதுகாப்பான தேசம் என்ற அடிப்படையிலேயே அன்றி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதால் மாத்திரம் கருத்திற்கொண்டு போட்டியிட எதிர்பார்க்கவில்லை என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதி தேர்தல் மற்று;ம தேசத்தின் எதிர்பார்ப்பு தொடர்பாக தனது கருத்து தெளிவுபடுத்தியிருக்கும் சபாநாயகர், தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக கௌரவம் மிக்க மதத் தலைவர்கள் உள்ளிட்ட மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஏனையவர்கள், பல்வேறு சிவில் சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்வேறு துறையைச் சேர்ந்த புத்திஜீவிகள், தொழிற்சங்கவாதிகள், இளைஞர் அணி பிரதிநிதிகள் ஆகியோர் உட்பட செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களும் என்னை தொடர்புகொண்டு பேசினார்கள். சில நபர்கள் என்னை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து, தொலைபேசி ஊடாகவும் அதேபோல பகிரங்க ஊடகவியலாளர் சந்திப்புகளிலும் சில விசேட விடயங்களுக்காக என்னை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

அந்த அனைத்து துறையினரும் முன்வைத்த பிரதான விடயமாவது, நாட்டினுள் ஜனநாயகத்தை உறுதிசெய்தல், சமகால அரசியல் நெருக்கடியை தீர்த்து, சிறந்த தலைமைத்துவத்துடன் கூடிய ஆட்சியை ஏற்படுத்தி நம்பகத்தன்மை வாய்ந்த தலைமைத்துவத்தின் அவசியம் காணப்படுவதோடு இந்த விடயங்களையே நானும் முன்வைக்கின்றேன். என்மீது இப்படியான நம்பிக்கையை வைத்திருக்கும் சர்வமதத் தலைவர்கள் உட்பட அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் முதலாவது மனமார்ந்த எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு எவ்வகையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், 1995ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக காணப்பட்டுவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதை முக்கிய விடயமாக கொண்டுள்ள அரசியல் சக்திகளுடன் இணைவதே பிரதான இலக்காகும். அத்தோடு 17ஆவது திருத்தத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட 19ஆவது திருத்தத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்ட பலமான ஜனநாயகப் பொறிமுறைக்காக முன்வருகின்ற பிரிவினருக்காக மாத்திரமே இந்த முடிவை அறிவிக்கின்றேன்.

பலம்வாய்ந்த ஜனநாயகம் மற்றும் பொருளாதாரம், ஒழுக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான தேசத்திற்காக குறிப்பிட்ட காலத்திற்காக செய்கின்ற அர்ப்பணிப்பாக அன்றி ஜனாதிபதி பதவிக்காக எவராலும் முன்வைக்கின்ற கோரிக்கைக்காக அல்ல என்பதை தெளிவாகக் கூறுகின்றேன்.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியைத் தலைமையாகக் கொண்டு முன்நிற்க வேண்டுமானால், அது கட்சியின் யாப்பிற்கு அமைவாகவும் அதேபோல அனைத்து தரப்பினரதும் ஆசிர்வாதத்துடனே யதார்;த்தமாகும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Advertiesment